#Breaking:இந்த பகுதியில் ‘ஷவர்மா’ விற்க தடை – நகராட்சி தலைவர் அதிரடி உத்தரவு!

Published by
Edison

கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து,தஞ்சை ஒரத்தநாடு பிரிவு சாலை பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே புதிதாக திறக்கப்பட்ட கிரீன் லீப் உணவகத்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு திடீரென வாந்தி,மயக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தற்போது மாணவர்கள் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.அதன்பின்னர்,கிரீன் லீப் உணவகத்துக்கு சீல் வைத்து தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக உணவகங்களில் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த வேளையில்,தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் ஷவர்மா விற்க அந்நகராட்சி தலைவர் சௌந்தரராஜன் தடை விதித்துள்ளார். மேலும், சுகாதாரமற்ற முறையில் அசைவ உணவுகளை விற்றால் சம்மந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் நகராட்சி தலைவர் எச்சரித்துள்ளார்.

இதனிடையே,தமிழகத்தில் ஷவர்மாவை விற்க தேவையான அடிப்படை வசதிகள்,பாதுகாப்பு வசதிகள் இல்லாத கடைகளை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்,ஷவர்மா போன்ற உணவுகளை சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Recent Posts

கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலைக்கு என்னவாயிற்று? மருத்துவமனையில் திடீர் சிகிச்சை!

கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலைக்கு என்னவாயிற்று? மருத்துவமனையில் திடீர் சிகிச்சை!

சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…

38 minutes ago

சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!

ஆப்கானிஸ்தான் :  அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…

1 hour ago

LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!

சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…

2 hours ago

சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!

சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…

2 hours ago

காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!

சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…

3 hours ago

ஐரோப்பிய ஒன்றியம் நம்மளை ஏமாத்துறாங்க! இனிமே 25% வரி..டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…

3 hours ago