ஈரோட்டில் 50 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைப்பு!

ஈரோட்டில் 50 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைப்பு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலக அளவில், 3,646,468 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 252,429 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில், 46,476 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வாகையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் போது, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும், கண்டிப்பாக முகக்கவசம் அணியா வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோட்டில் தனிமனித விலகல், முகக் கவசம் மற்றும் கையுறை ஆகியவை பயன்படுத்தாத 50 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.