சென்னையில் மூடப்பட்ட விலையில்லா அம்மா உணவு!

Default Image

விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்த சென்னை அம்மா உணவகங்கள் இன்றோடு முடிவடைந்து, இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சப்பாத்தி 3 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் காரணமாக உலக மக்கள் பல லட்சக்கணக்கில் உயிரிழந்துள்ள நிலையில், பலர் பட்டினியால் உயிரிழந்தனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 407 அம்மா உணவகங்களில் சில தன்னார்வலர்கள் உதவியுடன் விலையில்லா உணவு வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், இதுவரை 6 கோடிக்கும் அதிகமாக உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் தனது விலையில்லா உணவகத்தை நிறுத்திவிட்டு, இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சப்பாத்தி 3 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கு வழக்கம் போல விற்கப்படுகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்