முல்லை பெரியாறு விவகாரம் – சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் …!
நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின்பதாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றியுள்ளார்.
அப்போது பேசிய அவர் உச்சநீதிமன்றம் பேபி அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் ஏற்படுத்தக் கூடாது என தீர்ப்பளித்துள்ள நிலையில் தொடர்ந்து இடையூறு செய்து வருவதாகவும், அணையின் முழு அதிகாரமும் தமிழகத்திற்கு தான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.