முல்லை பெரியாறு அணை விவகாரம் : ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம்..!
தேனி மாவட்டம், கம்பத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தலைமையில், முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டுமென்று, தமிழக மற்றும் கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தேனி : கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணை விவகாரம் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது. அதன்படி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இருவருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்றது.
இந்நிலையில், தேனி மாவட்டம், கம்பத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தலைமையில், முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டுமென்று, தமிழக மற்றும் கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் அவர்கள் உரையற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர், அதிமுக வாங்கித்தந்த தீர்ப்புக்கு தற்போது ஆளுகின்ற அரசு குந்தகம் விளைவிக்கிறது. தீர்ப்பின்படி 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தாமல் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் யார் கொடுத்தது? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த போராட்டம் அதன் தீர்ப்பை எட்டும் வரை ஓயாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.