முல்லை பெரியாறு அணை பராமரிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு அளித்துள்ள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியாறு அணை மூலம் தமிழக கேரள மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த அணை பாதுகாப்பாக இல்லை என கேரள அரசும், பாதுகாப்பாக இருக்கிறது என பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடுத்துள்ளனர். அந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில், முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை செய்வதற்கு தமிழக அரசுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு தரவில்லை. அணை பராமரிப்பு ஒத்துழைப்பு அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது.
இந்த இடைக்கால வழக்கில், முல்லை பெரியாறு அணைக்கு அருகில் இருக்கும் பேபி அணையை பலப்படுத்த வேண்டும் எனவும், முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய 15 மரங்கள் அகற்ற வேண்டியுள்ளது.
ஆனால், கேரள அரசு உரிய ஒத்துழைப்பு தரவில்லை. இது தொடர்பாக முல்லை பெரியாறு அணை கண்காணிப்பு குழுவிடம் கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை. அதனால் தான் நீதிமன்றத்தில் இடைக்கால மனுவை அளித்துள்ளோம் எனவும், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனுவை அளித்துள்ளது. இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…