முல்லை பெரியாறு அணை விவகாரம் – தமிழக, கேரள தலைமைச் செயலாளர்கள் ஆலோசனை
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள தலைமைச் செயலாளர்கள் ஆலோசனை.
முல்லைப் பெரியாறு அணைக்கு கீழ் பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசால் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் கேரள தலைமைச் செயலாளர் ஜாய் ஆகியோர் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.