முல்லை பெரியாறு அணை விவகாரம்.! தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த கேரள அரசு.!
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டமானது 136 அடியை எட்டியதும் அதனை திறந்து வைகை அணைக்கு கொண்டு சேர்க்கவும், உபரி நீரை திறந்துவிடவும் கேரள அரசானது, தமிழக அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதே போல, இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணையும் வினாடிக்கு 6500 கனஅடி நீர் வீதம் நிரம்பி வருகிறது.
இதன் காரணமாக, அணையின் நீர்மட்டமானது உயர்ந்து கொண்டே வருகிறது. அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதும் அதனை திறந்து வைகை அணைக்கு கொண்டு சேர்க்கவும், உபரி நீரை திறந்துவிடவும் கேரள அரசானது, தமிழக அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் படி, முல்லை பெரியாரின் நீர்மட்டமானது, 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.