முகிலனை டிஸ்ஜார்ஜ் செய்ய முடியாது – காவல்துறையிடம் மருத்துவர்கள் பதில்!

140 நாட்களுக்கு பின் சென்னை வந்த முகிலன் அவர்களது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிமதிக்கபட்டார்.அவரை எப்பிடியாவது கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையினர் செயல்படும் வேளையில், முகிலனை மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஆர்வலர் முகிலன் அவர்கள் நேற்று எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது காவல் துறையினர் குடிநீர் கூட குடுக்காமல் தன்னை மிகவும் கொடுமை படுத்தியதாகவும், தற்போது மிகுந்த சோர்வுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். உடனடியாக, முகிலனை மருத்துவமனையில் அனுமதிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மருத்துவமனையில் வரும் சூழலில், அவரை கைது செய்ய காவலர்கள் திட்டமிட்டனர். இந்நிலையில், முகிலனை டிஸ்ஜார்ஜ் செய்ய முடியாது என்று காவலர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025