முகிலன் குறித்து துப்பு கிடைத்துள்ளது!ஆனால் தகவலை வெளியே கூற முடியாது -உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐடி போலீசார் தகவல்

முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமூக செயற்பாட்டாளர் முகிலன் பிப்ரவரி 15-ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து குறும்படம் ஒன்றை வெளியிட்டார். அன்று இரவிலிருந்து அவரைக் காணவில்லை.
எனவே காணாமல் போன முகிலன் குறித்து ஹென்றி திபேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இவரது மனுவிற்கு சிபிசிஐடி போலீசார் இன்று பதில் அளித்தனர்.அதில் முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது.காணாமல் போன முகிலன் குறித்த தகவலை வெளியே கூறினால் விசாரணை பாதிக்கப்படும். முகிலன் வழக்கில் போதுமான முன்னேற்றம் உள்ளது என்று தெரிவித்தது. பின்னர் இந்த வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025