நீலகிரியில் உள்ள முதுமலை சுற்றுலா மையம் இன்று முதல் திறப்பு.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை சுற்றுலா மையமானது கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று திறக்கப்படுகிறது.
முதுமலை சுற்றுலா மையத்தில் முதல் கட்டமாக இன்று வாகன சவாரி மட்டும் தொடங்கப்படுகிறது. 6-ம் தேதி முதல் யானைகள் சவாரி தொடங்குகிறது. அதன்படி வாகனங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் 2 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதுமலை சுற்றுலா மையம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…