இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலையினால் மக்கள் செய்வதறியாது தவித்து வரும் நிலையில், அவர்கள் வளர்க்கும் செல்லப்பிரானிகளுக்கம், வனவிலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி, அதில் `நீலா’ என்ற பெண் சிங்கம் கொரோனாவால் உயிரிழந்தது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்காவிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியத்தைத் தொடர்ந்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தமிழகத்தில் உள்ள உயிரியல் பூங்காக்களில் பராமரிக்கப்படும் விலங்குகள் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
இதன்படி ஆய்வுகள் மேற்கொண்டதில் முதுமலை தெப்பக்காட்டில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. யானையின் தும்பிக்கை, மலம் கழிக்கும் பகுதி ஆகியவற்றில் இருந்து நீர், பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.
இதையடுத்து யானைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், உத்தரபிரதேச மாநிலம் இடாக்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், நான்கு நாட்களுக்குள் சோதனை முடிவு தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…