திருமதி குஷ்பூ சுந்தர் அவர்களே, உங்கள் பதவி 1 வருடமா? – காயத்ரி ரகுராம்
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பூவுக்கு, காயத்ரி ரகுராம் கேள்வி.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவியில் குஷ்பூ, தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காயத்ரி ரகுராம் ட்வீட்
இதுகுறித்து பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திருமதி குஷ்பூ சுந்தர் அவர்களே, உங்கள் பதவி 1 வருடமா? பாராளுமன்றம் தேர்தலில் போட்டியிட உங்களுக்கு விருப்பமில்லையா? உங்களை அனுப்ப அண்ணாமலை திட்டமிட்டாரா, அரசியல் செய்ய விடவில்லை? தமிழகத்தை விட்டு அனைவரும் அனுப்பப்பட்டனர். மகளிர் ஆணையம் கவுரவ முன்னுரிமை பெற மட்டுமே.
பா.ஜ.,வில் பாலியல் பிரச்னைகள் தொடர்பாக பல புகார்கள் உள்ளன, அதை தீர்த்து வைப்பீர்களா அல்லது மறைக்க கம்பளத்தின் கீழ் துலக்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.,வில் பாலியல் பிரச்னைகள் தொடர்பாக பல புகார்கள் உள்ளன, அதை தீர்த்து வைப்பீர்களா அல்லது மறைக்க கம்பளத்தின் கீழ் துலக்கப்படுமா?
— Gayathri Raguramm ???????? (@Gayatri_Raguram) February 27, 2023