“என்ன மிஸ்டர் சீமான் சாபம்லாம் விடுறீங்க”- விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நடிகை!
உங்க கட்சியில இருக்க ஓட்டையை சரி பண்ணுங்க என்று விஜய்க்கு ஆதரவாக நடிகை விஜயலட்சுமி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை : தவெக மாநாடுக்கு முன்பு விஜய்யை ஆதரித்து வந்த சீமான், மாநாட்டுக்கு பின் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார். இருந்தாலும், யார் விமர்சனம் செய்தாலும் கடந்து செல்லுங்கள் என நிர்வாகிகளை விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
இப்படி இருக்கையில், நடிகர் விஜய்யை சீமான் கூமுட்டை என விமர்சித்ததற்கு விஜயலட்சுமி கடும் கண்டனம் தெரிவித்து யார் கூமுட்டை.? விஜய்க்கு என்ன பண்ணனும்னு தெரியும்.. உங்கள மக்கள் செருப்பால அடிப்பாங்க.. தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக பொங்கியபடி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “என்ன மிஸ்டர் சீமான்.. சாபம் எல்லாம் விடுறீங்க.. விஜய் அண்ணாவை லாரி மோதி செத்துற போறனு சொல்றீங்க. சாபம் விடுறதுக்கு நீங்க உத்தமரா? தலைவர் பிரபாகரன் கொடுத்த வேலையை பார்க்காமல், பப்ளிசிட்டி பண்ணிட்டு சுத்துற நீங்கதான் கூமுட்டை”எ னக் கூறினார்.
முதல்ல உங்க கட்சியில நடக்குற ஊழலை சரி பண்ணனுங்க.. அடுத்தாக திருச்சி சூர்யா வந்து உங்க ஆபாச வீடியோ எல்லாம் ரிலீஸ் பண்ணி உங்க மானத்தை வாங்க போறாங்கலாம். அதை எல்லாம் என்னனு முதலில் பாருங்க. தி.மு.க.,வுக்கும், விஜய் அண்ணனுக்கும் என்ன பண்ணனும்ன்னு நல்லாவே தெரியும்..’ என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
அசிங்கப்பாட்ட அண்ணன் சீமான்
வெளுத்துவிட்ட விஜயலட்சுமி pic.twitter.com/StThjKib9b— Dr. sundaravalli (@Sundara10269992) November 3, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு!
February 19, 2025
PAKvNZ : முடிஞ்சா தொட்டுப்பார்! பாகிஸ்தானுக்கு 321 ரன்கள் இலக்கு! மிரட்டிய நியூசிலாந்து!
February 19, 2025
IND vs BAN : இந்தியா vs வங்கதேசம் மேட்ச் எப்படி இருக்கும்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட் இதோ…
February 19, 2025
மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு! பாபர் அசாமை ஓரங்கட்டிய ‘No.1’ கில்!
February 19, 2025