திரு. எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் – அமைச்சர் வேலுமணி

திரு. எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த கொரோனா வைரஸால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தமிழ் திரையுலகின் பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் வேலுமணி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் திரு. எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025