திரு. மு. ராஜேந்திரனுக்கு முதல்வர் வாழ்த்து..!
எழுத்தாளர், முனைவர். மு. ராஜேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
எழுத்தாளர், முனைவர். மு. ராஜேந்திரன் அவர்களுக்கு 1801ஆம் ஆண்டில் நடைபெற்ற காளையார் கோவில் போரை முன்வைத்து எழுதப்பட்ட ‘காலா பாணி‘ நாவலுக்காக, “சாகித்திய அகாதமி விருது -2022” அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எழுத்தாளர், முனைவர். மு. ராஜேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து பதிவில், ”காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை’ எனும் வரலாற்றுப் புதினத்துக்காக சாகித்ய கடமை விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு. மு. ராஜேந்திரன் IAS (ஓய்வு) அவர்களுக்கு என் பாராட்டுகள். இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் வீரம் தோய்ந்த வரலாறு மேலும் வெளிச்சம் பெறட்டும்!’ என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.