கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் உடல் நிலை குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமாருக்கும், அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாருக்கு தற்போது வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பபட்டு வருகிறதாகவும், அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என விரும்புகிறதாகவும் தெரிவித்தார்.
அந்த வகையில், தி.மு.க தலைவர் முக ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளிட்டுள்ளார் அதில், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் அன்புச் சகோதரர் MP வசந்தகுமாரும் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் விசாரித்தேன். அவர் விரைவில் முழுமையான உடல்நலன்பெற்று மக்கள் பணியைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன் என தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார் .
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…