21 குண்டுகள் முழங்க எம்.பி செல்வராஜ் உடல் நல்லடக்கம்.!

Published by
கெளதம்

சென்னை: மறைந்த நாகை எம்பி செல்வராஜ் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செல்வராஜ் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார்.

சென்னையில் உயிரிழந்த அவரது உடல், சொந்த ஊரான சித்தமல்லியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று முதல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று குடும்பத்தினர் இறுதி சடங்கு நடத்தினர்.

அதன்பின், 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த நாகை எம்.பி. செல்வராஜ் உடலுக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு அஞ்சலி செலுத்தினார்கள்.

Published by
கெளதம்

Recent Posts

திமுக கூட தான் போட்டி…விஜய் 2-வது இடத்திற்கு வருவார்! தமிழிசை பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் வட்டாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக, மத்திய அமைச்சரும், பாஜக…

1 hour ago

தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில்…

2 hours ago

ரோஹித் முதல் பண்ட் வரை..அதிக தொகைக்கு எடுத்து சொதப்பும் 5 வீரர்கள்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் பேட்டிங்கிலும், பல வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், அதிக…

3 hours ago

கம்பேக் இப்படி இருக்கனும்! வசூலில் மாஸ் காட்டும் குட் பேட் அக்லி!

சென்னை : கம்பேக் என்றால் இப்படி இருக்கவேண்டும் என தமிழ் சினிமாவில் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் …

4 hours ago

தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா? முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன்!

சென்னை : இன்று ஏப்ரல் 1 தமிழ் மாதமான சித்திரை 1ஆம் தேதியை, ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு…

5 hours ago

பாஜகவுடன் கூட்டணி “ரொம்ப வருத்தம்”..! கதறி அழுத அதிமுக நிர்வாகி..!

சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…

5 hours ago