தமிழக எம்.பி.க்களில் அதிக விவாதங்களில் கலந்து எம்.பி ரவீந்திரநாத் குமார்

Default Image
  • நாடாளுமன்றத்தில் உள்ள  இரு அவையிலும் உறுப்பினர்களின் செயல்பாடுகளை குறித்து இரு அவைகளுக்குரிய இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
  • தமிழக எம்.பி-க்களில் அதிக எண்ணிக்கை விவாதங்களில் கலந்து கொண்டவர் ரவீந்திரநாத் குமார். இவரது வருகைப் பதிவு 79 சதவிகிதம்.

நாடாளுமன்றத்தில் உள்ள  இரு அவையிலும் உறுப்பினர்களின் செயல்பாடுகளை குறித்து இரு அவைகளுக்குரிய இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.அதில் தமிழக எம்.பி-க்களின் செயல்பாடுகளை ,தேசிய அளவிலான எம்.பி-க்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.

இதில் பா.ம.க-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடைசி இடத்தில் உள்ளார்.இவர் வருகைப்பதிவு 15 சதவிகிதம் மட்டுமே. மக்களவையில் குறைந்த செயல்பாட்டை கொண்ட எம்.பி.யாக ஜெகத்ரட்சகன் உள்ளார். இவர் 46 சதவீதம்  மட்டுமே.

இந்த ஆண்டில் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் இரு விவாதங்களில் மட்டுமே பங்கேற்றிருக்கிறார். அவர் எந்தக் கேள்வியையும் கேட்கவோ தனிநபர் மசோதா கொண்டுவரவோ இல்லை.

கடந்த 2014-ம் ஆண்டு தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி-யாகத் தேர்வான சமயத்திலும் அன்புமணி ராமதாஸ் குறைவாகவே நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் 39 மக்களவை எம்.பி-க்களில் மூன்று பேர் 100 சதவிகிதம் வருகைப்பதிவும் ,9 பேர் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான வருகைப் பதிவை வைத்து இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. அ.தி.மு.க சார்பாக மக்களவைக்குத் தேர்வான ரவீந்திரநாத் குமார் இதுவரை நடைபெற்ற 42 விவாதங்களில் பங்கேற்று உள்ளார்.

தமிழக எம்.பி-க்களில் அதிக எண்ணிக்கை விவாதங்களில் கலந்து கொண்டவர் ஆவார். இவரது வருகைப் பதிவு 79 சதவிகிதம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்