2026இல் மதுரையில் எய்ம்ஸ் கட்டப்படும். அந்த ஜப்பான் நிறுவனம் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதற்கான பணிகளை இன்னும் மத்திய அரசு தொடங்கிவிலை – என விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அண்மையில் தெரிவித்து இருந்தார். இந்த தகவல் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனென்றால் அடிக்கல் நட்டியதை தொடர்ந்து வேறு எந்த பணிகளும் அங்கு தொடங்கப்படவில்லை என்பதே உண்மை.
இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், ‘ இப்படிப்பட்ட பொய்யை ஜே.பி.நட்டா எப்படி தைரியமாக சொன்னார் என தெரியாவில்லை. தமிழர்களை ஏமாற்றும் வேலையை பாஜக நிறுத்தி கொள்ள வேண்டும்.
நம் நாட்டில், ஜப்பான் கடனுதவியால் கட்டப்படும் ஒரே எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக 2019 ஏப்ரலில் பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது வரை அதை தவிர வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை.’ என தெரிவித்தார் .
ஜப்பான் நிறுவனம் தாமதப்படுத்தினால், 50 சதவீத பணத்தை மாநில அரசு கொடுத்தால், மீதம் 50 சதவீத பணத்தை மத்திய அரசிடம் நாங்கள் பெற்று தருகிறோம் என அண்ணாமலை கூறியதை பற்றி பேசுகையில், கடனை கேட்டது மத்திய அரசு. நிலத்தை பெற்று தாருங்கள் கட்டி தருகிறோம் என கூறியது ஜப்பான் நிறுவனம். இந்த கதை கூட தெரியாமல் இப்படி பேசலாமா? உண்மையில் அண்ணாமலை ஐபிஎஸ் பிடித்தாரா என சந்தேகம் வருகிறது என கூறினார்.
மேலும், ‘ 90 சதவீத நிதியை ஜப்பான் நிறுவனம் வழங்கிவிடும். மீதம் 10 சதவீதம் மட்டுமே மத்திய அரசு வழங்க உள்ளது. 2026இல் மதுரையில் எய்ம்ஸ் கட்டப்படும். அந்த ஜப்பான் நிறுவனம் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதற்கான பணிகளை இன்னும் மத்திய அரசு தொடங்கிவிலை என்பதே உண்மை.’ என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…