எம்.பி. சு.வெங்கடேசனுக்கு நன்றி தெரிவித்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி…!
எம்.பி. சு.வெங்கடேசனுக்கு நன்றி தெரிவித்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள், தமிழக எம்.பிக்களின் கடிதங்களுக்கு இந்தியில் மத்திய அமைச்சர்கள் பதில் அளிக்கிற சட்ட விரோதமான நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,”ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்திய அலுவல் மொழிச்சட்டத்தை மத்திய அரசு, அதன் அலுவலர்கள் பின்பற்ற வேண்டும்.செய்தியாக இருந்தாலும் விளக்கமாக இருந்தாலும் அதனை தாய்மொழியில் புரிந்துகொள்ளும் போதுதான் முழுமையடைகிறது என நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, கனிமொழி எம்.பி. அவர்கள், மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு நன்றி தெரிவித்திருந்த நிலையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
ஜோதிமணி அவர்கள் பதிவிட்டுள்ள பதிவில், ஒன்றியஅரசின் அமைச்சகங்கள் தமிழக எம்பிகளுக்கு ஹிந்தியில் கடிதம் அனுப்பிவந்தன.இது சட்டவிரோதம்.எங்களில் பலருக்கு ஹிந்தி தெரியாது.பலமுறை சுட்டிக்காட்டியும் பயனில்லை.ஆகவே இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால், ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும். இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால், ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும். இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தோழர் @SuVe4Madurai அவர்களுக்கு நன்றி.
— Jothimani (@jothims) August 19, 2021