தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி, ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இந்த தொடர் கனமழை எதிரொலியாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழை பாதிப்பில் இருந்து தற்போது நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மீண்டுவரும் நிலையில், ஒருசில இடங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது. மழை நீரை அகற்ற அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி , முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பார்வையிட்டனர்.
அப்போது F.C.I குடோன் எதிர்புறம் உள்ள திரு.வி.க நகர் பகுதியில் வெள்ளநீர் வடியாமல் தண்ணீர் தேங்கி நின்று இருந்தது. அந்த வெள்ள நீர் வெளியேறும் பகுதியான மீன் வளக்கல்லூரி அருகில் சென்று பார்வையிட்டனர். அங்கு வெள்ளநீர் வெளியேறுவதற்க்கு சில இடங்களில் தடைகளாக இருந்த மண்னை அகற்றி விட வேண்டி இருந்தது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆணையர் தினேஷ்குமார் பேசினார்.
அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் தடையாக இருந்த மண்னை சுத்தப்படுத்தி வெள்ளநீர் வெளியேற செய்தனர். அப்போது அமைச்சர் கீதாஜீவன், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் தண்ணீர் வெளியேறுவதற்க்கு வழிவகை செய்ய உதவினர்கள்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…