தமிழக காவல்துறையை பாராட்டி எம்.பி.கனிமொழி ட்வீட்!
தமிழக காவல்துறையை பாராட்டி எம்.பி.கனிமொழி ட்வீட்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள ஓலைக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் பட்டியல் இன வகுப்பை சேர்ந்தவர். இவர் 100 செம்மறி ஆடுகளை வைத்து தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில், பால்ராஜின் ஆடுகள் அருகிலுள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிவசங்கு என்பவருக்கு சொந்தமான ஆட்டு பட்டிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
சிவசங்கு தனது பட்டிக்குள் ஆடு புகுந்ததால், அவரது உறவினர்களை அழைத்து பால்ராஜை தாக்கி, அவரை காலில் விழச் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல், இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பரப்பியுள்ளார்கள். இதனையடுத்து, போலீசார் சிவசங்கு உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், போலீசாரின் இந்த செயலை பாராட்டி திமுக எம்.பி.கனிமொழி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
தூத்துக்குடி மாவட்டம் ஓலைக்குளம் கிராமத்தில் பட்டியிலனத்தவர்களை இழிவுபடுத்தி வீடியோ பதிவு செய்து வெளியிட்ட குற்றவாளிகளை தாமதமின்றி கைது செய்த தமிழக காவல்துறைக்கு பாராட்டுகள். பட்டியிலினத்தவர்கள் மீது அவதூறுகளும் வன்கொடுமைகளும் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை
1/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 13, 2020
காவல்துறை அனைவருக்கும் உணர்த்த வேண்டும். 2/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 13, 2020