திமுக துணை பொதுச்செயலாளராக தூத்துக்குடி எம்.பி கனிமொழியை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் பொதுக்குழுவில் வெளியாகும் எனவும் தகவல் பரவி வருகிறது.
திமுகவின் உட்கட்சி பதவிகளுக்கான தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாவட்ட, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். அடுத்ததாக தலைவர், பொது செயலாளர், பொருளாளர் என முக்கிய நிர்வாகிகள் நாளை மறுநாள் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக துணை பொதுச்செயலாளர்களாக ஏற்கனவே, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி ஆகியோர் இருக்கின்றனர். துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.
இதனால் அந்த பதவிக்கு தூத்துக்குடி எம்.பியும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதுள்ளதாக திமுக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…