பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்பி கனிமொழி..!
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கவில்லை என பல மாநிலங்கள் வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநில அரசுகளுக்கு வழங்க போதிய நிதியில்லை என்பதால் தற்போது இழப்பீட்டு தொகையை கொடுக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கவேண்டும் என கூறி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு
எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மத்திய அரசு ஜி.எஸ்.டி நிலுவை தொகையை மாநிலங்களுக்கு உடனடியாக தர வேண்டும் என்று பாராளுமன்ற வளாகத்தின் உள்ளே எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டபோது என தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு ஜி.எஸ்.டி நிலுவை தொகையை மாநிலங்களுக்கு உடனடியாக தர வேண்டும் என்று பாராளுமன்ற வளாகத்தின் உள்ளே எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டபோது
Participated in a protest inside Parliament w/ opposition MPs to urge central government to clear GST dues with states pic.twitter.com/1YQOV8aYmC— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 17, 2020