கே.டி.ராகவன் மீது டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி புகார்..!
கே.டி.ராகவன் மீது காங்கிரஸ் எம்பி ஜோதி மணி டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் கொடுத்தார்.
பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. கே.டி. ராகவனுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி. ராகவன் அறிவித்தார்.
இந்நிலையில், பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட கே.டி. ராகவன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுக்ககோரி எம்.பி. ஜோதிமணி டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் எம்.பி. ஜோதிமணி கூறுகையில், பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது. அவரை கைது செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க-வினருக்கு எதிராக பல்வேறு புகார்கள் வந்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பாஜகவினரால் பெண்கள் பெருமளவில் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர் என்று கூறினார்.