மீன் பொறித்துக் கொண்டே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ம.நீ.ம கட்சி வேட்பாளர்…!

சமைத்துக் கொண்டிருந்த பெண்ணுடன் இணைந்து, மீனை பொறித்தவாறு, டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை, எழும்பூர் தொகுதி வேட்பாளர் பிரியதர்ஷினி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையடுத்து, அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வாக்கு சேகரிக்க செல்லும் ஒவ்வொருவரும், வித்தியாசமான முறையில் மக்களுடன் மக்களாய் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை, எழும்பூர் தொகுதி வேட்பாளர் பிரியதர்ஷினி அவர்கள், அவர்களது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டார்ச் லைட் சின்னத்தோடு சென்று வாக்கு சேகரித்த அவர், நரியங்காடு குடிசை மாற்று வாரியம் சமைத்துக் கொண்டிருந்த பெண்ணுடன் இணைந்து, மீனை பொறித்தவாறு, டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.