கனமழை எதிரொலி : மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து!
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும் நாளையும் (நவ.6,7) ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, நீலகிரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அதில், குறிப்பாக மேட்டுப்பாளையம் – உதகை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 60 அடி உயரத்தில் இருந்து மண் சரிந்து தண்டவாளத்தில் விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழலும் நிலவியது.
இருந்தாலும், மண் சரிவின் போது, ரயில் இயக்கப்படாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ரயில் பாதையிலுள்ள மண் சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக, சீரமைப்பு பணி முடிவடையும் வரையில் அதாவது 2 நாட்களுக்கு (நவ.6,7) மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025