மீனுக்கு பதில் வலையில் சிக்கிய 6 அடி மலை பாம்பு -அதிர்ச்சியடைந்த மீனவர்கள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள சொக்க நாதன்புத்தூரில் செல்லும் வழியில் உள்ள குளம் தொண்டமான் குளத்தில் 6 அடி மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள சொக்கநாதன்புத்தூரில் செல்லும் வழியில் உள்ள குளம் தொண்டமான் இந்த குளத்தில் மீன்கள் அதிகமாக இருப்பதால் மக்கள் மீன்பிடிப்பதற்காக குலத்தை உபயோகப்படுத்துகின்றனர் இந்த நிலையில் மீன்பிடிப்பதற்காக வலையை விரித்து வைத்திருந்த நிலையில் சிறிது நேரம் கழித்து வலையை இழுத்து பார்த்தவுடன் சுமார் 6 அடி நீளத்திற்கு மலைப் பாம்பு சிக்கியது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் பாம்பினுடைய கீழ்ப் பகுதி முழுவதும் வலை சிக்கியிருந்த நிலையில் பாம்பினால் தப்பிக்கமுடியவில்லை மேலும் வலையை நீக்கி பாம்பை பிடித்த மக்கள் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர் , மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்களிடம் பொதுமக்கள் பாம்பை ஒப்படைத்தனர்.
அந்த பாம்பை வனத்துறையினர் பாதுகாப்புக்காக பாம்பை வனப்பகுதியில் கொண்டுசென்றனர், மேலும் இந்த நிலையில் இதே போல் கடந்த மே மாதம் 30 தேதி மற்றும் ஜூன் மாதம் 25ஆம் தேதி மலைப்பாம்புகள் பிடிக்கப்பட்ட நிலையில் இன்று 4-வது முறையாக ஒரு மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.