அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..! சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு!
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள 20 சுங்க சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டுக்கு பத்து சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 460 க்கு மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் தமிழ்நாட்டில் மட்டும் 53 சுங்க சாவடிகள் உள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள 20 சுங்க சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி,விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை, கொடை ரோடு-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி-புதுச்சேரி-திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல், தர்மபுரி-கிருஷ்ணகிரி-தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி-திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணமாக ரூ.90 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.10 உயர்த்தப்பட்டு 100 ரூபாயாக அதிகரித்துள்ளது. பலமுறை பயணம் செய்யும் செய்ய ரூ.130 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வகை வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் ரூ.2,660 ஆக இருந்த நிலையில், ரூ.3045 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.