வாகன ஓட்டிகளே உஷார்…! இன்றுமுதல் ஓராண்டிற்கு இந்த சாலையில் வாகனங்கள் செல்ல இயலாது…!

Default Image

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம்கட்ட பணிகள்,  கோடம்பாக்கம் மற்றும் ஆற்காடு சாலையில் உள்ள பவர்ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை 100 அடி சாலை சந்திப்பு வரை நடைபெற உள்ளதால், கோடம்பாக்கம் ஆற்காடு சாலை வரையிலான போக்குவரத்து இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஒரு ஆண்டுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி போரூரில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக செல்லக்கூடிய வாகனங்களில் எவ்வித போக்குவரத்து மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் சாலிகிராமம், வடபழனி நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர் ஹவுஸ் சந்திப்புவரை சென்று அம்பேத்கர் சாலை வழியாக 100 அடிசாலை வழியாக செல்லலாம்.

வடபழனி சந்திப்பிலிருந்து, ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக் கூடாது. அசோக் பில்லரிலிருந்து, கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி துரைசாமி சாலை, வழியாக செல்லலாம்.

ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பிலிருந்து, பவர் ஹவுஸ் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பிற்கு ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுவதால் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live dharmendra pradhan
Minister Palanivel Thiyagarajan - BJP State president Annamalai
DMK MPs iniviting various state CMs
Jio - Starlink
hardik pandya virat kohli and rohit sharma
Malavika Mohanan sad
dharmendra pradhan Anbil Mahesh Poyyamozhi