மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
இந்நிலையில் இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அதிமுக-பாஜக-பாமக கூட்டணி பலவீனமான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல் போகும் .அதிமுக ஆட்சி குறித்து விமர்சித்த பாமகவுடன் கூட்டணி வைப்பதை ஜெயலலிதாவின் ஆன்மா கூட மன்னிக்காது.அம்மா 40 தொகுதிகளிலும் தனித்து நின்றது போல் தனித்து நிற்போம்.
அம்மா நினைவிடம் அமைக்க எதிர்த்தவர்களுடன் கூட்டணியா?… மக்கள் கூட்டம் இவர்களின் வெள்ளி, காசுக்கு அடிபணியாது. இந்த கூட்டணியை 40 தொகுதிகளிலும் தோற்க்கடிப்போம்.
அதிமுக-பாமக-பாஜக அனைவரும் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கி உள்ளனர், தோற்கப் போகும் கூட்டணி என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…