8 மாத குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு விற்ற தாய்…! போலீசார் தீவிர விசாரணை…!
தூத்துக்குடியில் 8 மாத குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு ஜெபமலர் என்ற பெண் விற்பனை செய்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டனுக்கு (38), தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெபமலருக்கும் (27) திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜெபமலர் அவரது குழந்தையை கூட்டிக் கொண்டு, தூத்துக்குடிக்கு வந்துள்ளார். இங்கு வந்த அவர் குழந்தையை, ரூ.3 லட்சத்திற்கு விற்றுள்ளார்.
இதற்கிடையில், மணிகண்டன் மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக தூத்துக்குடி வந்துள்ளார். அப்போது ஜெபமலரிடம் குழந்தை எங்கே எனக் கேட்டுள்ளார். அதன்பின் தான் அவர் குழந்தையை 3 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மணிகண்டன் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், ஜெபமலர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.