கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கட்சி எனும் பகுதியை சேர்ந்த கார்த்திகா எனும் 21 வயது பெண்ணுக்கு சஞ்சனா எனும் மூன்றரை வயது பெண் குழந்தையும், சரண் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளது. திடீரென குழந்தை சரண் மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா கூறவே, அருகிலிருந்தவர்கள் குழந்தையாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் விஷம் சாப்பிட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தாயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல ஆண்களிடம் பேசி பழகியதுடன், ஒருவர் குழந்தைகள் இருப்பதால் பேச்சை நிறுத்தியதாகவும், இதனால் குழந்தைகளை கொன்றுவிட்டால் மீண்டும் பேசுவார் என்ற எண்ணத்தில் குழந்தைகள் இருவருக்கும் உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பெண் குழந்தை உணவை அவ்வளவாக சாப்பிடாததால் ஒன்றும் செய்யவில்லை, சிறுவன் சாப்பிட்டதால் உயிரிழந்துவிட்டான் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…