மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்தவர் கார்த்திக். நிறைமாத கர்ப்பிணியான இவரது மனைவி தீபாவுக்கு கடந்த 18-ம் தேதி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது அவருக்கு இரண்டாவது குழந்தை.
இந்நிலையில், தீபா தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அறுவை சிகிச்சை செய்த தையலை பிரித்துள்ளார். பிரித்த பின் வீடு திரும்பிய தீபாவுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இவருக்கு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு தீபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குழந்தை பிறந்து இரண்டே வாரத்தில் தாய் இறந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், தீபாவின் மரணம் இயற்கையான மரணமா? அல்லது தவறான சிகிச்சையால் ஏற்பட்ட மரணமா? என போலீசார் விசாரித்து வருகினறனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…