[Representative Image]
ராணிப்பேட்டையில் குடும்ப தகராறில் தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் அதே பகுதியில் சலூன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி ரேணுகா அந்த கிராமத்தில், கிராமத்தில் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார்.
குடும்ப தகராறில் தற்கொலை
இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த ரேணுகா அங்கன்வாடி மையத்திற்கு சென்ற மகன் மற்றும் மகள் இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் தாய் மற்றும் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் தீயணைப்பு துறையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை கொண்டு வருகின்றன.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…