கிணற்றில் இரண்டு குழந்தைகளை தள்ளிவிட்டு தாயும் தற்கொலை..!

womendeath

ராணிப்பேட்டையில் குடும்ப தகராறில் தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி தானும் தற்கொலை செய்துகொண்ட தாய். 

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் அதே பகுதியில் சலூன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி ரேணுகா அந்த கிராமத்தில், கிராமத்தில் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார்.

குடும்ப தகராறில் தற்கொலை 

family problem
[Image Source : Austroupay]

இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த ரேணுகா அங்கன்வாடி மையத்திற்கு சென்ற   மகன் மற்றும் மகள் இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் தாய் மற்றும் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் தீயணைப்பு துறையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை கொண்டு வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்