பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து தாய் துளசியை கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூரில் வசித்து வரும் தம்பதி துளசி-வடிவழகன். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த துளசிக்கு ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் சித்தூருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், துளசியின் செல்பேசியை பார்த்துள்ளார்.
அதில் அவருடைய ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ இருந்துள்ளது. இதனை பார்த்த வடிவழகன் காவல்துறையில் மனைவி துளசி மீது புகார் அளித்துள்ளார். மேலும், இந்த குழந்தையை அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.
இதன் பின்னர், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையின் உத்தரவால், ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்த துளசியை சிறப்பு தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…