மூன்று மகன்கள் இருந்தும் தாய், தந்தை துாக்கிட்டுத் தற்கொலை…! காரணம் என்ன…?

Published by
பால முருகன்

மூன்று மகன்கள் இருந்தும் முதிய தம்பதி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் பட்டியை சேந்தவர் குணசேகரன், இவருடைய மனைவி செல்வி, இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர், முதல் மகன் செவ்வாய்ப் பேட்டையிலும் இரண்டாவது மகன் பெரம்பூளுரிலும் வசித்து வருகின்றனர், மேலும் கடைசி மகன் ஸ்ரீதர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் மேலும் ஸ்ரீதர் அப்பகுதியில் தச்சராக பணியாற்றி வருகின்றனர், இவருக்கு குடிப்பழக்கம் மிகவும் அதிகமாக இருந்துள்ளது திருமணமாகாமல் இருக்கும் இவர் வேலை செய்யும் பணத்தை வீட்டில் கொடுக்காமல் வந்துள்ளார்.

இந்த நிலையில் குணசேகரனிற்கு ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருந்ததால் வீட்டில் வறுமை நிலவியது, 4 மாதமாக வீட்டின் வாடகை கூட கொடுக்கவில்லையாம். வீட்டிற்கு தேவையான பணம் கிடைக்காத காரணத்தால் பல இடங்களில் காவலாளியாக பணியாற்றி வந்தார், ஆனால் அந்த பணமும் அவரது வீட்டிற்கு கட்டுப்படியாகவில்லை.

மேலும் வீட்டு வாடகை 4 மாதங்கள் வீட்டு வாடகை கொடுக்கமால் இருந்ததால் தனது இரண்டு மகன்களையும் தொடர்பு கொண்டுள்ளார். அவர் மகன்களிடம் தனது வறுமையை பற்றி கூறியுள்ளார், அவர்களுடைய மகன்கள் வாடகை பற்றி ஒன்னும் இல்லை நீங்கள் எங்களுடன் வந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

மேலும் மகன்களுடன் பேசிய முடித்து விட்டு, புதன் கிழமை இரவு திடீரெனெ குணசேகரன் மற்றும் அவருடைய மனைவி செல்வி இரண்டு பெரும் தூக்கிட்டு தற்கொலை செய்தனர், மேலும் 10 மணிக்கு வீட்டிற்கு வந்த கடைசி மகன் ஸ்ரீதர் கதவைத் தட்டியுள்ளார். தட்டி பார்த்ததில் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாகப் பார்த்த போது பெற்றோர் துாக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அலறினர்.

சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து இருவரின் உடலை மீட்டனர், மேலும் கடந்த வியாழக்கிழமை மாலை சென்னை ஓட்டேரியில் உள்ள மின்மயானத்தில் இருவரது உடல்களுக்கும் போலீசார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…

2 hours ago
வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…

3 hours ago
போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

4 hours ago
12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …

4 hours ago
ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…

5 hours ago
கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…

5 hours ago