தனித்திருக்க வேண்டும், விழித்திருக்க வேண்டும்…! இதுவே முதல்வரின் வேண்டுகோள் – செல்லூர் ராஜு
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இது முதல்வருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டு, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கொரோனா ஹோரரின் இரண்டாவது அலையில் இருந்து விரைவில் விடுபட வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டதாகவும், பெருவாரியான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது வரவேற்புக்குரிய ஒன்று என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழக முதல்வர் முறையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.எல்லா மக்களுக்கும் கொரோனா குறித்து முறையாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், தனித்திருக்க வேண்டும், விழித்திருக்க வேண்டும். இதுவே முதல்வரின் வேண்டுகோள் என்றும், முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இது முதல்வருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் கூறியுள்ளார்.