போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னையில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டார்கள். இது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி டெங்குவை ஒழிக்க ட்ரோன்கள் மூலம் நீர்நிலைகளில் மருந்துகளை தெளிப்பது, கொசுமருந்து அடிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் அவர் கூறுகையில், போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது குறித்து விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் போரூர் ஏரியை மூட முயற்சி நடந்தது. ஸ்டாலின் நடத்திய போராட்டத்தால் தான் தற்போது போரூர் ஏரி இருக்கிறது. அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர், ஓ.பன்னீர் செல்வம் என தெரிவித்தார். மேலும், போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : முன்னதாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபேரலி தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி இரண்டிலும் வெற்றி…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல்…
ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், இன்று 3ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு…
மதுரை: கோரிப்பாளையம் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியின் போது சாரம் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு…
சென்னை : ஃபெங்கல் புயல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே 30ஆம் தேதி காலை கரையை கடக்கும் என்று வானிலை மையம்…