மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் ரத்து….!!!
கஜா புயல் காரணமாக மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் தூத்துக்குடி, மதுரை, திருச்சி விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து நேற்று காலை 6:05 மணியளவில் தூத்துக்குடி கிளம்பவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நேற்று காலை 6:50 மணிக்கு திருச்சி செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமால், மதுரையிலிருந்து கிளம்பவிருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.