இறப்பு விகிதம் குறைவாகத்தான் உள்ளது -அமைச்சர் வேலுமணி
தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாகத்தான் உள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரானா பாதிப்பை பொருத்தவரை இறப்பு சதவீதம் மிக குறைவாக உள்ளது.கோவை மாவட்டத்தில் போர்க்கால நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவர்கள் , செவிலியர்கள் , சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் கண்காணிப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.