விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதனின் மகள் 20 வயதான கோகிலா, இவர் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இதனிடையே கோகிலாவும் அதே பகுதியை சேர்ந்த செங்கேணி மகன் பரமசிவம் என்பவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கோகிலா கர்ப்பமாகியுள்ளார். இதையறிந்த கோகிலாவும், காதலன் பரமசிவனும், பயத்தில் இதைப்பற்றி வீட்டில் சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளனர். பின்னர் வழக்கமாக கல்லூரிக்கு செல்வது வீட்டுக்கு வருவது என கோகிலா இருந்து வந்துள்ளார். இது ஒரு கட்டத்தில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக மாற கோகிலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோகிலாவை ஆவணிப்பூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது, திருமணம் ஆகாமல் கோகிலா குழந்தை பெற்றது அவரது பெற்றோரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்ட பெற்றோர் ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலா பெற்ற குழந்தையின் அப்பா பரமசிவம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தல்படி அந்த பெண்ணை பரமசிவம் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். பின்னர் பரமசிவம் மற்றும் கோகிலா ஆகிய இருவருக்கும் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் பெற்றோர் போலீசார் மற்றும் உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…