காலையில் பிரசவம் மாலையில் கல்யாணம்.! காவல்துறை எடுத்த அதிரடி முடிவு.!

Default Image
  • விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோகிலா என்ற பெண் காதல் வசப்பட்டு திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றக்கொண்ட அதிர்ச்சி சம்பவம். இதை கண்ட பெற்றோர் காவல்நிலையத்தில் புகார். 
  • போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலா பெற்ற குழந்தையின் அப்பா பரமசிவம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தல்படி அந்த பெண்ணை பரமசிவம் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதனின் மகள் 20 வயதான கோகிலா, இவர் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இதனிடையே கோகிலாவும் அதே பகுதியை சேர்ந்த செங்கேணி மகன் பரமசிவம் என்பவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கோகிலா கர்ப்பமாகியுள்ளார். இதையறிந்த கோகிலாவும், காதலன் பரமசிவனும், பயத்தில் இதைப்பற்றி வீட்டில் சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளனர். பின்னர் வழக்கமாக கல்லூரிக்கு செல்வது வீட்டுக்கு வருவது என கோகிலா இருந்து வந்துள்ளார். இது ஒரு கட்டத்தில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக மாற கோகிலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோகிலாவை ஆவணிப்பூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது, திருமணம் ஆகாமல் கோகிலா குழந்தை பெற்றது அவரது பெற்றோரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்ட பெற்றோர் ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலா பெற்ற குழந்தையின் அப்பா பரமசிவம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தல்படி அந்த பெண்ணை பரமசிவம் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். பின்னர் பரமசிவம் மற்றும் கோகிலா ஆகிய இருவருக்கும் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் பெற்றோர் போலீசார் மற்றும் உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்