தர்பூசணி பழத்தின் அளவுக்கு அதிகமான விளைச்சல்! கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி

Default Image

தர்பூசணி பழத்தின் அளவுக்கு அதிகமான விளைச்சலால், கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி. 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புகுள்ளாகியுள்ளது. 

இந்நிலையில், புதுச்சேரியில் செந்தில்குமரன் என்ற விவசாயி, தர்பூசணி மற்றும் கிர்ணி பழங்களை பயிரிட்டுள்ளார். இவர் நல்ல விளைச்சலை கண்ட போதிலும், கொரோனா ஊரடங்கால், போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில், வெளி மாவட்டங்களுக்கு தர்பூசணி பழங்களை ஏற்றுமதி செய்ய இயலாத நிலையில், உள்ளூர் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு தர்பூசணி பழங்களை கேட்கின்றனர். 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செந்தில்குமரன், பழங்களைப் பறித்து ட்ராக்டரில் ஏற்றி வந்து கிராம மக்களிடம் இலவசமாக கொடுத்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்