#BREAKING: உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை..!

Default Image

உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்தி, அதன் முடிவுகளை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் பணிகளை முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் தனி அலுவலர் பதவி காலம் நீட்டிக்கபடுவதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
TVK Vijay - BJP Senior Leader H Raja
tvk vijay
Union minister Piyush goyal say about StartUps
Vijay gets Y category security
Indian Astronaut Shubhanshu Shukla
BJP State President K Annamalai