தமிழகத்தில் இன்று 2-ம் நாளாக கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95-ஐ கடந்துள்ளது
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 99,794 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 2-ம் நாளாக 97 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,935 ஆக உயர்ந்துள்ளது. இதில் 50 வயதிற்குப்பட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்த 82 பேரில், தனியார் மருத்துவமனையில் 29 பேரும், அரசு மருத்துவமனையில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 89 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து 62-ம் நாளாக இரட்டை இலக்கை எட்டியுள்ளது.
அதில் அதிகபட்சமாக, சென்னையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,113 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 248 பெரும், மதுரையில் 237 பேரும், திருவள்ளூரில் 239 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,711 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,224 ஆக அதிகரித்தது. இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…