திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 6க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து சேதம்.!
- செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் பகுதியில் தனியார் பேருந்து பழுது பார்க்கும் நிலையத்தில் 6க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து நாசமாகின.
- இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு தீ காயமும் ஏற்படவில்லை. பின்னர் தீ பற்றிய காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் பகுதியில் தனியார் பேருந்து பழுது பார்க்கும் (ஒர்க்ஸ்ஹாப்) உள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர் அருகில் இருந்த பேருந்துகளுக்கு தீ பரவியது. இதில் 6க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த பின்னர் மறைமலை நகர், சிறுசேரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்து உள்ளே வேலை செய்து கொண்டிருப்பவர்கள் யாருக்கும் எந்த ஒரு தீ காயமும் எற்படவதவாறு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் தீ பற்றிய காரணம் குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் தாழம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.