கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 74 வட்டம் கலைஞர் நகரில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அருகே பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்எல்ஏ நா.கார்த்திக் தலைமையிலும், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முமச.முருகன், பகுதி கழக செயலாளர் எஸ்எம்.சாமி, வட்டக்கழக செயலாளர் மேகநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏ பேசுகையில், கோவை மாநகராட்சி முழுவது சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாகவும், குப்பைகள், சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேட்டின் பகுதியாக கோவை உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் பல நோய்கள் பரவ கூடிய உள்ளது எனவும், மாநகராட்சியின் பணிகளில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் எஸ்பி.அன்பரசின் தலையீடு இதில் உள்ளது, இதை வன்மையாக கண்டிப்பதாகவும், மாநகராட்சியின் இதுபோன்ற செயல்களை கண்டித்து 11-3-20 அன்று கோவை டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சியின் மெயின் அலுவலகத்தை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் முற்றுகையிட உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அடிப்படை வசதிகள் செய்து தராத கோவை மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…